வள்ளியூர் சாமியார் பொத்தை முத்துகிருஷ்ணசுவாமி குருபூஜை விழாவில் பெரியபுராணம் நாடகம்

வள்ளியூர்,நவ.22:  சாமியார்பொத்தை புரத்தில் மகாமேரு மண்டபம் அமைக்கப்பட்டு பூஜைநடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் வெகு விமரிசையாக முத்துகிருஷ்ண சுவாமியின் 105வது குருபூஜை மற்றும் குருஜெயந்தி விழா நடந்து வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விசேஷ பூஜைகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருவிழாவில் நேற்று லலிதகலா மந்திர் மாணவர்கள் வழங்கிய அப்பூதி அடிகள் நாயனாரின் பெரியபுராணம் நாடகம் நடந்தது. தொடர்ந்து தினமும் கலைநிகழ்ச்சிகளும் சிறப்பு மருத்துவ முகாமும் அன்னதானமும் நடைபெற்று வருகிறது. ஏற்பாடுகளை பூஜ்ய மாதாஜி வித்தம்மா தலைமையில் முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: