சென்னை, நவ.20: கபாலீஸ்வரர் கோயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏவின் உதவியாளரின் ஸ்கூட்டரை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை சீத்தம்மாள் காலனியை சேர்ந்தவர் செல்ல கிருஷ்ணன் (35). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் என்பவரிடம் நேர்முக உதவியாளராக வேலை ெசய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்துடன் செல்ல கிருஷ்ணன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு ஸ்கூட்டரில் வந்தார்.