இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

சென்னை: சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2014ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு பிரான்சிஸ் ஆகிய மூன்று பேரும்  எனது அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று கூறி எனது செல்போனை பறித்துக் கொண்டு தகாத வார்த்தையால் பேசி கைவிலங்கு போட்டு வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர்.

எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், ஏட்டு பிரான்சிஸ் ஆகிய 3 பேருக்கும் ₹லட்சம் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: