எஸ்.ஏ.பி மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினவிழா

உத்தமபாளையம், நவ.15: உத்தமபாளையம் எஸ்.ஏ.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. உத்தமபாளையம் எஸ்.ஏ.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம் தாளாளர் ஆறுமுகம் தலைமையிலும், பள்ளியின் செயலாளர் கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது.

குழந்தைகள் தினக்கொண்டாட்டம் பற்றியும், அதன் நோக்கங்கள் குறித்தும் பள்ளி முதல்வர் ஹரிஜக் விளக்கினார். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கவிதை, கட்டுரை, மாறுவேட போட்டி நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories: