×

ஆசிரியையை தாக்கிய மாணவனை மாற்றக்கோரி தேர்வு புறக்கணிப்பு ஆசிரியர்கள் போராட்டம் செல்போனில் பார்த்து தேர்வு எழுதிய சம்பவம்

போளூர், நவ. 15: ஜமுனாமரத்தூரில் ஆசிரியையை தாக்கிவிட்டு தப்பியோடிய மாணவனை வேறு பள்ளிக்கு மாற்றக்கோரி ஆசிரியர்கள் தேர்வு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே உள்ள ஜமுனாமரத்தூரில் வனத்துறை மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது 12ம் வகுப்பிற்கு 2ம் பருவ தேர்வு நடைபெற்று வருகிறது.
பள்ளியில் படபஞ்மரத்தூர் கிராமத்தை சேர்ந்த மாணவன் முரசொலிமாறன் பிளஸ்2 படித்து வருகிறான். கடந்த 12ம் தேதி தேர்வு நடந்தபோது, மாணவன் செல்போனை வைத்துக்கொண்டு அதை பார்த்து தேர்வு எழுதியதாக தெரிகிறது. இதை தேர்வு மேற்பார்வையாளராக அதே பள்ளியை சேர்ந்த ஆங்கில ஆசிரியை அனிதா பார்த்து செல்போனை பறித்துக்கொண்டாராம்.

அப்போது மாணவன் முரசொலிமாறன், தனது செல்போனை தருமாறு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் ஆசிரியை தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மாணவன், ஆசிரியை அனிதாவை தாக்கிவிட்டு ஓடிவிட்டாராம். காதில் அடிபட்ட ஆசிரியை ஜமுனாமரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை ெபற்றார். இந்நிலையில் மாணவனின் தந்தை சில அதிமுக பிரமுகர்களுடன் சென்று மாணவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் புகார் ஏதும் கொடுக்க கூடாது எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியை அனிதா போலீசில் புகார் செய்யவில்லையாம்.
இந்நிலையில் ஆசிரியைக்கு ஆதரவாக பள்ளியில் வேலை செய்யும் அனைத்து ஆசிரியர்களும் ஒன்றுசேர்ந்து, மாணவனை வேறு பள்ளிக்கு மாற்றக்கோரி இரண்டாம் பருவத் தேர்வை ேநற்றுமுன்தினமும், நேற்றும் புறக்கணித்தனர்.

இதுகுறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் போளூர் கல்வி மாவட்ட அலுவலர் கருணாகரனுக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் விசாரணை நடைபெற உள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
(செய்திஎண்07) கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Tags : student ,teacher ,examination ,protest ,boycott teachers ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...