×

2,460 வாக்குப் பதிவு இயந்திரம் சரிபார்ப்பு

கிருஷ்ணகிரி, அக்.18 : கிருஷ்ணகிரி அருகே பைனப்பள்ளி டாஸ்மாக் குடோன் அருகில் உள்ள கிடங்கில், மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2,460 வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நேற்று நடந்தது. இந்த பணியை கலெக்டர் பிரபாகரும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் பார்வையிட்டனர். இந்த பணியின் போது, வாக்குகளை பதிவு செய்த பின் தனது வாக்குகள் பதிவாகியுள்ளதா என்று பார்க்கும் விவிபேடு இயந்திரத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். பெங்களூரு பெல் நிறுவனத்தை சேர்ந்த 11 இன்ஜினியர்கள் அரசியல் கட்சியினருக்கு விளக்கினர். ஒரு வாரம் நடைபெறவுள்ள இப்பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர்.  கலெக்டர் கூறுகையில், ‘வாக்குப்பதிவின் போது கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு விவி பேடு(ஓட்டுப்பதிவு செய்து ரசீது வழங்கும் இயந்திரம்) குறித்து தெரியாது என்பதால், தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் இயந்திரத்தை வைத்து விளக்கம் அளிக்கப்படவுள்ளது. மேலும், ஒவ்வொரு கிராம பகுதிக்கும் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,’ என்றார்.  

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு