ஓசூர் பரோடா வங்கி கிளை சார்பில் விவசாயிகள் தின கொண்டாட்டம்

ஓசூர், அக்.16:  ஓசூர் பாங்க் ஆப் பரோடா வங்கியில், தேசிய உணவு தினத்தையொட்டி ‘பரோடா உழவர் தினம்’ கொண்டாடப்பட்டது. அக்.1ம் தேதியில் இருந்து விவசாயிகளின் செழுமையான வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான விழிப்புணர்வு கூட்டங்கள், கடன் வழங்குதல் போன்ற விழாக்களை வங்கி நிர்வாகம் நடத்தி வருகிறது.  மேலும், பரோடா வங்கி, மாநில பட்டு வளர்ச்சி பயிற்சி மையம் மற்றும் பட்டு வளர்ச்சித்துறையுடன் இணைந்து பட்டுப்புழு விவசாயிகளுக்கும், அதை சார்ந்த தொழில் புரிவோருக்கும் விழிப்புணர்வு மற்றும் கடன் வழங்குதல் கூட்டம் நடைபெற்றது.

இதில், பாங்க் ஆப் பரோடா கோவை பிராந்திய மேலாளர் தோமச்சன், பட்டு வளர்ச்சி துறை தர்மபுரி மண்டல இணை இயக்குனர் யோகமாலா, மாநில பட்டு வளர்ச்சிமைய முதல்வர் ரமேஷ், துணை முதல்வர் லட்சுமணன், பட்டு வளர்ச்சித்துறை துணை இயக்குனர் ஹரிலிங்கம், ஓசூர் பரோடா வங்கி கிளை முதுநிலை மேலாளர் சுகுணாதேவி, கிருஷ்ணகிரி கிளை மேலாளர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், மேற்பட்ட விவசாயிகள், அதை சார்ந்த தொழில் புரிவோர், வாடிக்கையாளர்கள்கலந்து கொண்டனர். 35 விவசாயிகளுக்கு ₹2.12 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது. விவசாயிகள் பலர் கவுரவிக்கப்பட்டனர். 100க்கும் மேற்பட்ட விவசாயிகளும், அதை சார்ந்த தொழில் புரிவோரும், வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: