மஹா புஷ்கரவிழாவின் 5ம் நாளில் தீர்த்த கட்டங்களில் சிறப்பு வழிபாடு

வி.கே.புரம், அக். 16:    வற்றாத ஜீவ நதியான தாமிரபரணிக்கு மஹா புஷ்கர விழா கடந்த 11ம்தேதி துவங்கியது. 5வது நாளான நேற்று பாபநாசத்தில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கானோர் அதிகாலையிலேயே புனித நீராடினர்.  அனைத்து வாகனங்களையும் போலீசார் டாணா வரை மட்டுமே செல்ல அனுமதித்தனர். அங்கிருந்து பக்தர்கள் நடந்து சென்று பாபநாசம் படித்துறையில் புனித நீராடினர். இதே போல் உள்ளுர் மாவட்ட மக்களும் திரண்டுவந்து குளித்து சென்றனர்.

 தாமிரபரணி மஹா புஷ்கரத்தையொட்டி பாபநாசத்தில் சித்தர்கள் கோட்டம் சார்பில் நேற்று காலை ராஜேனீஸ்வரன் சுவாமி  தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் முருகன்நாதன் சாமி, தங்கமணி சாமி, தங்கதுரை, பிரசாத குழு ஜெயலட்சுமி  உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து மாலை   தமிழ் ஆகம விதிப்படி 16 வகையான தீப ஆரத்தி வைபவம் நடந்தது. இதை முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா துவக்கிவைத்தார். அவருடன் மாவட்டச் செயலாளர் சொக்கலிங்கம், துணைச் செயலாளர் சிவன்பாபு, மாவட்ட பொருளாளர் மாரிமுத்து, நகரச் செயலாளர்கள் வி.கே.புரம்  பாலகிருஷ்ணன், அம்பை சுரேஷ், சேரன்மகாதேவி மாரிதுரை, சிவந்திபுரம் கோபிநாத், ஒன்றியச் செயலாளர் மாரிதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே அகில இந்திய துறவியர்கள் சங்கம் சார்பில் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்ற மாநாடு நடந்தது.

அம்பை:  அம்பை காசிநாதர் கோயில் தீர்த்தவாரி படித்துறையில் புஷ்கர விழாவின் 5வது நாளான நேற்று நதிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.  தொடர்ந்து பக்தர்கள் புனித நீராடினர். அம்பை ரயில்வே பாலத்திற்கு அருகே தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அமைந்துள்ள  நட்டாத்தி அம்மன் கோயில் படித்துறையில் காலை 7 மணிக்கு கோ பூஜை மகா அபிஷேக அலங்கார பூஜை மற்றும் நதி பூஜை நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் மாரிமுத்து, தொழிலதிபர் லட்சுமிநாராயணராஜா தலைமையில் நடந்தது. மாலை ஆரத்தி பூஜை நடந்தது. இதில் நிர்வாகிகள் ஆறுமுகம், சிவராமன், சிவகுருநாதன், சீத்தாராமன், சங்கர், சங்கரன், எஸ்.ஆறுமுகம், நாராயணகிருஷ்ணன், குமாரவேல், சண்முகவேலாயுதம், பட்டுராஜன் உள்ளிட்ட கன்னி விநாயகர் பக்தர்கள் குழு நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

 இதே போல் ஆலடியூர் படித்துறையில் கோ பூஜை நதி பூஜை, மாலை ஆரத்தி பூஜை நடந்தது. அம்பை அருகேயுள்ள ஊர்க்காடு தாமிரபரணி நதிக்கரை திருகோட்டிய்ப்பர் முனி தீர்த்தத்தில் நடந்த ஆரத்தி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்ஹனர்.

 கல்லிடைகுறிச்சி தாமிரபரணீஸ்வரர் ஆலயத்தில் நேற்று காலை தாமிரபரணிக்கு மஹா யாகம் முதலான பல்வேறு பூஜைகள் மற்றும் தீர்த்தவாரி புஷ்கர நீராட்டு நடந்தது. மாலை கோடிகுங்குமத்தால் சிறப்பு அர்ச்சனையும், மாலை 6 மணிக்கு ஆரத்தி வைபவம் நடந்தது.  இதே போல் மஹா புஷ்கரத்தையொட்டி  சந்தனத்தை பெண்கள் பூசி கொண்டு ப்ருகு தீர்த்த கட்டத்தில் புனித நீராடினர். கல்லிடைகுறிச்சி தாமிரபரணீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள மாதா தாமிரபணி தாய் ப்ரசன்ன சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கல்லிடைக்குறிச்சி கன்வ தீர்தத்தில் சங்கல்ப ஸ்நானம், தீர்த்தவாரி நடந்தது.

ஊர்காடு ராமர் கோயில் படித்துறை, ஆஞ்சநேயர் கோயில் படித்துறை, சங்கரன்கோயில், ஆலடியூர், நட்டாத்தியம்மன், மனேந்தியப்பர் ஆகிய படித்துறைகளில்  சிறப்பு பூஜைகள் , ஆரத்தி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். கரந்தையார் பாளையம் பிராமண மஹா சங்கம் சார்பில் 5 வது நாளான நேற்று வராக தீர்த்த கட்டமான ஆயிரங்கால் மண்டபத்தில் த்ரைலோக்ய மோஹன வச்ய கணபதி ஹோமம், ஸோம க்ரஹ சாந்தி பூஜை நடந்தது.  தொடர்ந்து நதியில் பூ போட்டு சிறப்பு பூஜை நடந்தது.

அனைவரும் கொண்டாட வேண்டும்

மஹா புஷ்கரத்தையொட்டி தமிழக பாஜ துணைத் தலைவர், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன், பாபநாசம் தீர்த்த கட்டத்தில், 12 நதிகளின் புண்ணிய தீர்த்தத்தை மஞ்சளில் கலந்து தாமிரபரணி நதியில் விட்டு தனது குடும்பத்தாருடன் புனித நீராடினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணிக்கு நடத்தப்படும் மஹா புஷ்கர விழாவில் எவ்வித பேதமுமின்றி அனைவரும் தாமிரபரணியில் புனித நீராடி விழாவை கொண்டாடவேண்டும்’’ என்றார். இதையடுத்து அகில இந்திய துறவியர்கள் சங்கத்தின் தீப ஆரத்தி வைபவத்தைத் துவக்கி வைத்தார்.

Related Stories: