கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி தாய் விக்ரஹ வீதியுலா

அம்பை, அக். 11:  அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதியில் மகா புஷ்கர விழாவையொட்டி நேற்று மாலை தாமிரபரணி தாய் விக்ரஹ வீதியுலா நடந்தது. இங்குள்ள ஆற்றுப்பாலம் அருகே உள்ள பிருகு தீர்த்த கட்டம், மாதா தாமிரபரணீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய மாதா தாமிரபரணி தாய் விக்ரஹம் வீதியுலா நடந்தது. கல்லிடைக்குறிச்சி மஹாமேரு முன்பிருந்து டாக்டர் பத்மநாபன் தலைமையில் புறப்பட்ட விக்ரஹ ஊர்வலத்தை கல்லிடைக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர், இன்ஸ்பெக்டர் கவுரி மனோகரி ஆகியோர் துவக்கி வைத்தனர். ஊர்வலம் சன்னதி தெரு, மாடவீதி, தொந்தி விளாகம் தெரு, ராமச்சந்திரபுரம், குத்துக்கல் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று அகஸ்தியர் சன்னதி தெரு 6ம் நம்பர் சாலை மெயின் ரோடு  வழியாக  மாதா

தாமிரபரணி ஆலயம் வந்து சேர்ந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள்  வழிபாடு செய்தனர். பின்னர் இரவு மருந்து சாத்துதல் மற்றும் பிரதிஷ்டை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கல்ந்து கொண்டனர். இன்று முதல் 22ம் தேதி வரை காலை 9.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், புஷ்கர மகா யாகம், 10.45 மணிக்கு மாதா தாமிரபரணிக்கு பூர்ணாஹூதி, அபிஷேகம், காலை 11.20க்கு தீர்த்தவாரி புஷ்கர நீராடுதல், பிரசாதம் வழங்குதல், மாலை 4.30 மணிக்கு மாதா தாமிரபரணிக்கு கோடி குங்கும அர்ச்சனை, மாலை 6 மணிக்கு நவஆரத்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதேபோல் அம்பை, கல்லிடைக்குறிச்சி அனைத்து தீர்த்த கட்டங்களிலும் நடக்கிறது.

Related Stories: