சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோயில் நவராத்திரி, பரிவேட்டை திருவிழா

சுசீந்திரம், அக். 11: சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோயில் நவராத்திரி விழா, பரிவேட்டை திருவிழா நேற்று தொடங்கியது. விழா வருகிற 19ம்தேதி வரை நடக்கிறது. நேற்று காலை 6 மணிக்கு அஷ்டாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சகால தீபாராதனை, மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் கொலு தீபாராதனை ஆகியவை நடந்தது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சகஸ்ரநாமம் நடந்தது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற 19ம் தேதி வரை நடக்கிறது.  19ம் தேதி மாலை 4 மணிக்கு யானை மற்றும் மேளதாளம் முழங்க குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு அம்மன் புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் அம்மனுக்கு சன்னதித்தெரு விநாயகர் கோயில் கமிட்டி சார்பில் வரவேற்பு வழங்கப்படுகிறது.

பின்னர் வழுக்கம்பாறை ஜங்சனில் பரிவேட்டை நடக்கிறது. அதனை தொடர்ந்து  அம்மனுக்கு பல்வேறு கோயில்கள் சார்பில் வரவேற்பு வழங்கப்படுகிறது. பின்னர் கோயிலுக்கு அம்மன் வந்தவுடன் கலசபூஜை நடக்கிது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை துணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், காரியம் ஹரிபத்மநாபன் மற்றும் முன்னுதித்த நங்கை அம்மன்கோயில் பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்துள்ளனர்.

Related Stories: