சேலம் அம்மன் கோயில்களில் நவராத்திரி விழா ெதாடங்கியது

சேலம், அக்.10: ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஐப்பசி முதல் வாரம் வரையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 9 நாட்களுக்கும் அம்மனுக்கு விரதம் இருந்து பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர். கோயில்கள், வீடுகளில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து, சிறப்பு வழிபாடும் நடத்தி வருகின்றனர். இந்த வகையில் நடப்பாண்டிற்கான நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. சேலம் தாதகாப்பட்டி வழிவாய்க்கால் காளியம்மன் கோயில் வளாகத்தில் 30 அடி உயரத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து, நவராத்திரி சிறப்பு வழிபாடு தொடங்கியது. இங்கு, அந்த பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசித்தனர். வரும் ஐப்பசி 2ம் தேதி வரை தினமும் இரவு 6 மணிக்கு ேஹாமம் நடத்தப்படுகிறது.

இதேபோல், சேலம் செவ்வாய்பேட்டை காளியம்மன் மாரியம்மன் கோயில், அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயில், அம்மாபேட்டை பலபட்டறை மாரியம்மன் கோயில், செங்குந்தர் மாரியம்மன் கோயில், குகை மாரியம்மன் கோயில் ஆகியவற்றிலும் நவராத்திரி விழா கொண்டாட்டம் தொடங்கியது. இங்கு, தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, வழிபாடு நடத்தப்படுகிறது. இதுபோக மாநகர பகுதியில் உள்ள பலரது வீடுகளில் நவராத்திரி கொலு பொம்மைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.

Related Stories: