மாநகராட்சி ஆணையர் தகவல் முசிறி, தொட்டியத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்

தா.பேட்டை, அக்.9:  முசிறி, தொட்டியம் தாலுகாவில் மூன்றாம் கட்ட வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. முசிறி மற்றும் தொட்டியம் தாலுகாவில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. மையங்களை முசிறி ஆர்டிஓ ரவிச்சந்திரன், தாசில்தார்கள் முசிறி சுப்ரமணியன், தொட்டியம் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்தல் துணை தாசில்தார்கள் தனபாக்கியம், தங்கவேல் ஆகியோர் மைய அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், வார்டு மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1,019 மனுக்கள் பெறப்பட்டது. இறுதி முகாம் வரும் 14.10.2018 அன்று நடைபெற உள்ளது.

Related Stories: