வயது 32… எடை 120 கிலோ… இதயத்தில் பெரிய கட்டி!

நன்றி குங்குமம் டாக்டர்  

120 கிலோ எடையுள்ள 32 வயதுடைய ஆணுக்கு, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சிறுதுளை செயல்முறை சிகிச்சை மூலம் மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய இதயக் கட்டியை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது

கட்டியின் அளவு 11.5x8 செ.மீ. தற்போதுள்ள மருத்துவ பதிவுகளின்படி, இது மருத்துவ வரலாற்றில் இதயத்தில் இருந்து அகற்றப்பட்ட மிகப்பெரிய கட்டி எனக் கருதப்படுகிறது.வரலாற்றில் அரிதான மற்றும் பெரிதான இதயக் கட்டி அறுவை சிகிச்சை செய்து 32 வயது, மிகவும் பருமனான, இளைஞருக்கு இரண்டாவது வாழ்க்கை வாய்ப்பைத் தந்துள்ளனர். ஃபோர்டிஸ் மலரின் இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தேஜஸ்வி என் மார்லா தலைமையிலான புகழ்.பெற்ற மருத்துவர்கள் குழு வழக்கமான இதய அறுவை (conventional sternotomy) சிகிச்சைக்குப் பதிலாக சிறுதுளை (Minimally Invasive) இதய அறுவை சிகிச்சை மூலம் இந்த சவாலான சிகிச்சையில் வெற்றிகொண்டு இந்த இளைஞருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.

மூச்சுத் திணறல் மற்றும் அடிக்கடி மயக்கம் போன்ற அறிகுறிகளுடன் ஒரு இளம் இதய நோயாளி மருத்துவமனையை அணுகினார். நோயறிதல் ஆய்வுக்குப் பிறகு, டாக்டர் ஜி மனோகர், மூத்த இருதயநோய் நிபுணர், நோயாளியின் வலது ஏட்ரியத்தில் (right atrium) உள்ள மிகப் பெரிய இதயக் கட்டியின் காரணமாக அறிகுறிகள் ஏற்பட்டதாகக் கண்டறிந்தார். 11.5x8 செமீ அளவுள்ள பெரிய கட்டி வலது ஏட்ரியத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து வலது வென்ட்ரிக்கிளுக்கான (right ventricle) இரத்த ஓட்டத்தை முற்றிலும் தடுத்துக்கொண்டிருந்தது.

மருத்துவ நிபுணர்கள் சரியான நேரத்தில் கட்டியைக் கண்டறிந்து, சிறுதுளை இதய அறுவை சிகிச்சை முறையில் இதயக் கட்டியை அகற்றி இதய அறையை புனரமைப்பு செய்தனர். இதயத் திசுக்கள் புற்றுநோய்க்கு மிகவும் எதிர்ப்புத் திறன் கொண்டவை என்பதால் இதயக் கட்டிகள் அரிதான நிகழ்வுகளாகும். அகற்றப்படாத இதயக் கட்டி ரத்த ஓட்டத்தை முழுமையாகத் தடுக்கும் வாய்ப்புள்ளதால் அவை உயிருக்கு ஆபத்தானவையாக கருதப்படுகிறது..

இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தேஜஸ்வி என் மார்லா,  இந்த சிகிச்சையைப் பற்றி விரிவாகப் பேசுகையில், ‘‘இது மருத்துவ வரலாற்றில் சிறுதுளை (Minimally Invasive) இதய அறுவை சிகிச்சை செயல்முறை மூலம் அகற்றப்பட்ட மிகப்பெரிய இதயக் கட்டியாகும். எக்கோ கார்டியோகிராம் (echocardiogram) மற்றும் கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராபி இமேஜிங் (computerized tomography imaging) செய்த பிறகு, 120 கிலோ எடையுள்ள ஆண் நோயாளிக்கு வலது ஏட்ரியத்தில் (right atrium) கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இந்தக் கட்டி வலது வென்ட்ரிக்கிளுக்கு (ventricle) போகும் இரத்த ஓட்டத்தைத் தடுத்துக் கொண்டிருந்தது. கட்டிகள் பொதுவாக இதயத்தில் வருவது அரிதானது ஆகும். இந்த கட்டி நுரையீரல் தமணிக்கான (pulmonary artery) ரத்த ஓட்டத்தை தடுத்திருந்தால் உடனடியாக மரணத்துக்கு வழிவகுத்திருக்கும்.

‘‘ஏட்ரியம் (atrium) போதுமான அறை இடைவெளியுடன் சரியாக  புனரமைக்கப்படாவிட்டால் அறுவைசிகிச்சை முழுமையடையாது. நோயாளி அதிக பருமனாக இருந்ததால் சிகிச்சையளிப்பது சற்று சவாலாக இருந்தது. வழக்கமான இதய அறுவை சிகிச்சை (conventional sternotomy) முறை நோயாளியை மூன்று மாதங்களுக்கு படுக்கையில் இருக்க வைத்துவிடும். நோயாளியின் பாதுகாப்பு, கார்டியோபுல்மோனரி பைபாஸ் (Cardiopulmonary bypass) மூலம் சரியான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துதல் மற்றும் ஹைபோவென்டிலேஷனின் (hypoventilation) மயக்க மருந்து ஆபத்து போன்ற மருத்துவ  நுட்ப சவால்களை முறியடித்து, இதய மயக்கவியல் நிபுணர்களான டாக்டர் அஜீதா பி.கே மற்றும் டாக்டர் நவீன் குமார் டி ஆகியோரைக் கொண்ட எங்கள் நிபுணர் குழு வெற்றிகரமாக கட்டியை அகற்றி இந்த இளைஞனுக்கு புதிய வாழ்க்கையை அளித்தது.

முதல் பரிசீலனைக்குப் பிறகு, நோயாளியின் உடல்நிலை நன்றாக இருந்தது, மேலும் அவரது இதய செயல்பாடு சாதாரணமாக உள்ளது” என்கிறார் டாக்டர் தேஜஸ்வி என் மார்லா. ஃபோர்டிஸ் மலரின் இயக்குநர் திரு. சந்திரசேகர் கூறுகையில், “ஒரு குடும்பத் தலைவனுக்கு இயல்பான வாழ்க்கையை வழங்கிய நிபுணர் குழுவை நான் வாழ்த்துகிறேன். அவரது இளம் வயது மற்றும் இதயக் கட்டியுடன் வாழ்வதில் சிரமம் ஆகியவற்றின் காரணத்தால் அறுவை சிகிச்சை அவசியமாகிறது.

சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்து சரியான சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுத்தது நோயாளிக்கு ஒரு புதிய வாழ்க்கையைப் பெற உதவியது. டாக்டர் தேஜஸ்வி என் மார்லா மற்றும் அவரது அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, தீவிர சிகிச்சை நிபுணர்கள், இருதய மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளி விரைவில் குணமடைய உதவியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.

Related Stories: