சிறையிலடைக்கப்பட வேண்டிய எச்.ராஜாவுக்கு 100 போலீஸ் பாதுகாப்பா? எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர் கேள்வி

சென்னை: சென்னையில் எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையால் ஆளுநருக்கு பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் விரைவாக 7 தமிழர்களின் விடுதலைக்கு ஒப்புதலை வழங்க வேண்டும். முதல்வரையும், காவல்துறையையும் விமர்சித்தார் என்று கூறி எம்எல்ஏ கருணாஸை  தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.  அதைவிட மிக மோசமாக உயர் நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறையையும் விமர்சனம் செய்ததோடு பொது அமைதிக்கு பங்கம் விளவிக்கும் வகையில் பேசிய, எந்த ஒரு மக்கள் பிரதிநி பதவியையும் வகிக்காத பாஜவின்  எச்.ராஜாவை கைது செய்யாமல் சுதந்திரமாக விட்டுள்ளது.

அவர் செல்லும் இடமெல்லாம் போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருவதாக செய்திகள் வெளியாகின்றன. கைது செய்து சிறையிலடைக்கப்பட வேண்டிய ஒரு குற்றவாளிக்கு 100 போலீஸ் பாதுகாப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத  ஒரு செயல். கருணாஸ் மீது காட்டிய சட்ட நடைமுறையின் வேகத்தை எச்.ராஜா மீதோ, எஸ்.வி.சேகர் மீதோ காட்டாதது பல சந்தேங்களை தமிழக அரசு மீது ஏற்படுத்துகிறது. எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: