வள்ளியூர் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

வள்ளியூர், செப்.19: வள்ளியூர் அருகே  துலுக்கர்பட்டியில் குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகளால் குடிநீர் வெளியேறி வீணாகிறது. இதனால் போதிய தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். வள்ளியூர் அருகேயுள்ள துலுக்கர்பட்டி, ஆனைகுளம், கண்ணநல்லூர், சித்தூர், வில்வனம்புதூர், தங்கையம், சமூகரெங்கபுரம், கோட்டைகருங்குளம், சீயோன்மலை, போன்ற பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் முலம் தெருவிற்கு பைப் லைன் கொடுக்கப்பட்டு  குடிநீர் வழங்கப்படுகிறது.

இதேபோல் இப்பகுதிகளுக்கு  14ஆயிரம் லிட்டருக்கு மேல் குடிநீர் வழங்கவேண்டும். ஆனால் குடிநீர் தட்டுப்பாட்டால் குறைந்தளவே வழங்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது. கண்ணநல்லூரிலிருந்து ஆனைகுளம் செல்லும் மெயின்ரோட்டின்  அருகில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ஆறாக ஓடி குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி வீடுகளுக்கு செலலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: