தேன்கனிக்கோட்டை, ஆக.15: தேன்கனிக்கோட்டை அருகே டி.கொத்தனூர் பெருமாள் கோயிலில் 101ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை அருகே டி.கொத்தனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 101ம் திருக்கல்யாண உற்சவம் மற்றும் மஹாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மஹா கணபதி ஆராதனை, அஸ்ட திக்பாலக்க ஆராதனை, பரிவார தேவதாரனை, யாக மண்டப பிரவேசம், நவகிரஹ ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றது.