×

சேலத்தில் தபால் தலை சேகரிக்கும் மாணவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

சேலம், ஆக.13: தபால் தலை சேகரிக்கும் பள்ளி மாணவர்கள், ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்களை அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தபால்துறை, அஞ்சல் தலை சேகரிக்கும் வழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு “தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா’’ ஊக்கத்தொகை திட்டத்தை தொடங்கியுள்ளது. இதில், ஊக்கத்தொகை பெற தகுதியுடைவர்களாக, 6 முதல் 9 வரையில் படிக்கும் மாணவர்களில் தபால்நிலையங்களில் அஞ்சல் தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் உள்ளனர்.

மேலும், பள்ளியில் இயங்கும் தபால் தலை சேகரிப்பு மன்றத்தில் அங்கத்தினராக இருந்தாலும், இத்திட்டத்தில் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பக்கலாம். புதிதாக தபால் தலை சேகரிப்பு கணக்கை தொடங்க, அருகேயுள்ள தபால்நிலையத்தில் ரூ. 200 செலுத்தி கணக்கை உடனே தொடங்கிக்கொள்ளலாம்.பள்ளி இறுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 சதவீத தளர்ச்சி உண்டு. விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள், தலைமை தபால் நிலையம் மற்றும் மற்ற அனைத்து தபால்நிடிலயங்களிலும் விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

வரும் 16ம் தேதிக்குள், “முதன்மை அஞ்சல் அதிகாரி, சேலம் தலைமை தபால் நிலையம், சேலம்-636001 அல்லது முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம், சேலம் கிழக்கு தபால் கோட்டம், சேலம்-636001,’’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்பியவர்களுக்கு 2 கட்ட போட்டிகள் நடத்தி, ஊக்கத்தொகை பெற தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி முதல் கட்டமாக எழுத்துபூர்வ தபால் தலை சேகரிப்பு பற்றிய வினாடி வினா தேர்வு நடத்தப்படும். 2ம் கட்டமாக தபால் தலை சேகரிப்பு பற்றிய திட்ட அறிக்கை தயாரித்தல் போட்டி நடத்தப்படும். இதில், தேர்வாகும் நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் முஜீப் பாஷா கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :
× RELATED மது, கஞ்சா போதையில் வாலிபர்கள் ரகளை