சேலம், ஜூலை 26: சேலம் மாவட்ட நுகர்வோர்கள் உணவு பாதுகாப்பு குறித்த புகார்களுக்கு மண்டல உணவு பாதுகாப்பு அலுவலர், மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உணவு பாதுகாப் புத்துறை ஆணையர் சமீபத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்களை இடமாறுதல் செய்து உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சில மாவட்டங்களிலிருந்து இடமாற்றம் மூலம் சேலம் மாவட்டத்தின் உணவு பாதுகாப்புப் பிரிவில் பொறுப்பேற்றுள்ளனர். நுகர்வோரும், உணவு விற்பனையாளர்களும், உணவு பாதுகாப்பு குறித்து பயன்பெற ஏதுவாக உணவு பாதுகாப்பு அலுவலர்களின் பெயர், செல்போன் எண் , அலுவலக முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர்கள் உணவு பாதுகாப்பு குறித்து புகார் தெரிவிக்க சேலம் மாவட்ட நியமன அலுவலர் செல்போன் எண்: 94431 58399 மற்றும் உணவு பாதுகாப்புத் துறை மாநில வாட்ஸ் அப் நெம்பர்: 94440 42322 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். கொண்டலாம்பட்டி மண்டலம், ஐஏ ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசண்முகம் : 98430 43606 என்ற எண்ணிலும், ஓமலூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா சந்திரன் :94876 25415 என்ற எண்ணிலும், அஸ்தம்பட்டி மண்டலம் ஐஐ உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீனி வாஸ் :97894 75574 என்ற எண்ணிலும், எடப்பாடி ஒன்றியம் மற்றும் எடப்பாடி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசுப்ரமணியன் : 88311 36501 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சூரமங்கலம் மண்டலம் ஐ உணவு பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் : 88385 45708 என்ற எண்ணிலும், சங்ககிரி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ்: 80126 75428 என்ற எண்ணிலும், ஆத்தூர் ஒன்றியம் மற்றும் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பாலு: 99424 83441 என்ற எண்ணிலும், மேச்சேரி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து: 82200 50454 என்ற எண்ணிலும், பனமரத்துப்பட்டி ஒன்றியஉணவு பாதுகாப்பு அலுவலர் கோவிந்தராஜன்: 82200 50473 என்ற எண்ணிலும், மகுடஞ்சாவடி ஒன்றியம் மற்றும் கொங்கணாபுரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேஷ்: 82200 50469 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வாழப்பாடி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சுருளி : 90431 71417 என்ற எண்ணிலும், கொளத்தூர் மற்றும் மேட்டூர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் முனுசாமி: 94430 18235 என்ற எண்ணிலும், சேலம் ஒன்றியம் மற்றும் ஏற்காடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ்: 93626 63843 என்ற எண்ணிலும், பெத்தநாயக்கன்பாளை யம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன்: 94430 11687 என்றஎண்ணிலும், காடையாம்பட்டி ஒன்றிய உணவு பாது காப்பு அலுவலர் சுந்தரராஜன்: 94438 26557 என்ற எண்ணிலும், அயோத்தியாபட்டிணம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோ: 94435 75475 என்ற எண்ணிலும், கெங்கவல்லி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சிங்காரவேல்: 94421 52857 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.