சாலையோர புதர்களை அகற்றிய மலை கிராம மக்கள்

வால்பாறை :  வால்பாறை அருகே ரயான் மலைகிராம மக்கள் இணைந்து பொதுப்பணித்துறை இடத்தில் சாலையோர புதர்களை அகற்றினர்.வால்பாறையை அடுத்த கீழ் நீராறு அணை அடுத்து உள்ளது ராயன் மலை கிராமம். இங்கு சுமார் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதியில் இருந்து மளிகை மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்கு சிங்கோனாவிற்கு வரவேண்டும். இந்நிலையில் கொரோனா பரவலை முன்னிட்டு பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நடந்தும், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கீழ் நீரார் அணை பகுதியில் பொதுப்பணித்துறை இடத்தில் சாலையோரம் இருபுறமும் அளவுக்கு அதிகமான புதர்கள் சாலையை மூடியது. புதர்களில் யானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் மறைந்திருந்து அந்த வழியாக செல்பவர்களை தாக்குகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் பொதுப்பணி துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனர்.  ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால், தாங்களாகவே முன்வந்து சுமார் 1 கி.மீட்டர் துாரத்திற்கு சாலையின் இருபுறமும் உள்ள புதர்களை அகற்றி உள்ளனர். கிராம மக்களின் செயலுக்கு வால்பாறை தாசில்தார் ராஜா பாராட்டு தெரிவித்து உள்ளார்….

The post சாலையோர புதர்களை அகற்றிய மலை கிராம மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: