பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

மதுரை: மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனியை சேர்ந்தவர் ஜெகதீஸ்(39). இவரது மனைவி மணிமாலா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. ஜெகதீஸ் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது பணம் மற்றும் நண்பர்களிடம் கடனாக பணத்தை பெற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார்.

ஆனால் பங்குச்சந்தையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடும் மன உளைச்சலிருந்த அவர், நேற்று முன் தினம் காலையில் அவரது வீட்டில் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

Related Stories: