பேரிடர் மேலாண்மை துறையில் 76 பணியிடம் நிரந்தரமாக கலைப்பு

வேலூர்: தமிழ்நாடு அரசு, தேவையில்லாத செலவினங்களை கட்டுப்படுத்தி நிதி ஆதாரத்தை நிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த்துறையின் பேரிடர் மேலாண்மை துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் தலா ஒரு முதுநிலை ஆய்வாளர் மற்றும் அலுவலக உதவியாளர் என மொத்தம் 76 பணியிடங்களை கலைத்து அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் மற்றும் நிதி ஆணையர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: