சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல்

மும்பை:  எம்பி சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி)யை சேர்ந்த மாநிலங்களவை எம்பி சஞ்சய் ராவத்துக்கு நேற்று மதியம் வந்த ஒரு குறுஞ்செய்தியில் “பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை கொலை செய்தது போல் உன்னையும் கொன்று விடுவோம்” என்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த கொலை மிரட்டலுக்கு டெல்லியை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இதுகுறித்து சஞ்சய் ராவத் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த புனேவை சேர்ந்த 20 வயது இளைஞரை மும்பை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், “ராவத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளோம் ” என்றார்.

Related Stories: