நாட்றம்பள்ளி அருகே எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த 250 காளைகள்

நாட்றம்பள்ளி :  நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில் எருது விடும் விழாவில் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடியது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லபள்ளி ஊராட்சிக்குட்பட்ட சுண்ணாம்பு குட்டை பகுதியில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த 250க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்றன.

போட்டியில் பங்கு பெற்ற காளைகள் அனைத்தும் கால்நடை மருத்துவரின் சோதனைக்கு பிறகே ஓட அனுமதி அளித்தனர். இவ்விழாவை திருப்பத்தூர் கோட்ட அலுவலர் முத்தையா தலைமையில்,  உறுதிமொழி எடுத்து துவக்கி வைத்தார்.

இதில் நாட்றம்பள்ளி தாசில்தார்  குமார், இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும்  வருவாய்த் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும், போட்டியில்  குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் ஓடி கடந்த காளைகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவினை காண சுற்றுபகுதியுள்ள கிராம இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் விழா குழுவினர் மற்றும் சுண்ணாம்பு குட்டை பொது மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: