குமரியில் வெள்ளை திராட்சை விற்பனை : ஆர்வமுடன் வாங்கி செல்லும் மக்கள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பழவகைகள் விற்பனை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இளநீர், தர்பூசணி விற்பனை அதிக அளவு நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்க இளநீர் நெல்லை, தென்காசி மாவட்டம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு வருகிறது. பச்சை இளநீர் ரூ.30க்கும், சிவப்பு இளநீர் ரூ.35 முதல் ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தர்பூசணி பழம் குமரி மாவட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அதிக அளவு வருகிறது. இந்த பழங்களை தவிர கரும்பு ஜூஸ் உள்பட பல ஜூஸ்கள் விற்பனையும் களைகட்டியுள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வெள்ளை திராட்சை அதிக அளவு விற்பனைக்கு வந்துகொண்டு இருக்கிறது. இந்த வெள்ளை திராட்சை ஒரு கிலோவிற்கு ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளை திராட்சை விலை குறைவால் அதிக அளவு மக்கள் வாங்கிச்செல்கின்றனர். வெள்ளை திராட்சை குமரி மாவட்த்திற்கு கடந்த இரு மாதங்களாக வந்துகொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளை திராட்சை சீசன் முடிந்துவிடும். அதன்பிறகு மாம்பழம் சீசன் தொடங்கிவிடும் என பழவியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: