தஞ்சையில் அதிவேகமாக சென்ற மினி பேருந்து சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது மோதி விபத்து: இருவர் காயம்

தஞ்சை: தஞ்சையில் தாறுமாறாக சென்ற மினி பேருந்து, சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. ஓட்டுனரின் கவனக்குறைவால் சாலையோரத்தில் இருந்த 20க்கும் இறப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் இருவர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து ரெட்டிபாளையம் செல்லக்கூடிய மினி பேருந்து பயணிகளுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் பாலாஜி நகர் அருகே சென்றுகொண்டிருக்கும்போது ஓட்டுனரின் கவனக்குறைவு காரணமாக தாறுமாறாக சென்ற மினி பேருந்து சாலையின் இடதுபுறம் நின்று கொண்டிருந்த 20க்கும் இறப்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

மேலும் செல்போன் பேசியபடி நின்றுகொண்டிருந்த இருவர் மீது பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். பேருந்து மோதியதில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. பேருந்து மோதியதில் மின்கம்பமும் சரிந்து விழுந்தது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என கூறியிருக்ககூடிய நிலையில், ஓட்டுனரின் கவனக்குறைவால் பேருந்து அதிவேகமாக வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் ஆம்புலன்ஸ் மூலமாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related Stories: