கொடைக்கானலில் படகு குழாம் சீரமைப்பு பணி தாமதம்: சுற்றுலாப் பயணிகள் அவதி

கொடைக்கானல்: கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நகராட்சி சார்பில் நடந்து வரும் படகு குழாம் சீரமைப்பு பணி தாமதமாகி வருவதால் சுற்றுலாப் பயணிகள் வீண் அலைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் மத்திய பகுதியாக நட்சத்திர ஏரி உள்ளது. இந்த ஏரியில் நகராட்சி மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. நகராட்சி சார்பில் ஏரிக்கரையின் மையப்பகுதியில் இயங்கி வந்த படகு குழாமில் இருந்து சுற்றுப்பயணிகள் படகுகளில் ஏறி, ஏரியை சுற்றி வருவர்.

ஆனால் இந்த படகு குழாம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனை சீரமைத்து தரவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி விடுத்து வந்தனர். இதையடுத்து நகராடசி சார்பில் ரூ.பல லட்சம் செலவில் படகு குழாமை சீரமைக்கும் பணிகள் துவங்கின. ஆனால் பணி துவங்கி பல மாதங்கள் ஆகியும், இன்னும் முடிவு பெறாமல் உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிக்காக ஏரிக்கரையில் மையப்பகுதியில் இருந்து சுமார் அரை கிமீ தொலைவில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மற்றொரு இடத்திற்கு அலைய வேண்டிய நிலை உள்ளது.

மையப்பகுதியில் உள்ள படகு குழாம் பயன்பாடின்றி காட்சி பொருளாகவே நீடிக்கிறது என கொடைக்கானல் பகுதி பொதுமக்களும் குற்றம் சாட்டியிருக்கின்றனர். எனவே சுற்றுலாப் பயணிகளின் வீண் அலைச்சலை தவிர்க்க படகு குழாம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: