ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் மம்தா தர்ணா போராட்டம்

கொல்கத்தா:  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கு வங்க மாநிலத்திற்கு வழங்கவேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் பாரபட்சம் காட்டுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். மேலும் ஓபிசி மாணவர்களுக்கான உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்துக்கு எதிராக ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுவதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி 2 நாள் தர்ணா போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.  மத்திய கொல்கத்தா, ரெட் சாலையில் உள்ள அம்பேத்கார் சிலை அருகே மம்தா மற்றும் திரிணாமுல் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். 2வது நாளாக நேற்றும் மம்தா தர்ணா போராட்டத்தை தொடர்ந்தார்.

Related Stories: