திருவையாறு அருகே பாலம் கட்ட குழிதோண்டியபோது 3 சாமி சிலை கண்டெடுப்பு

திருவையாறு: திருவையாறு அருகே பாலம் கட்ட குழி தோண்டியபோது 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கருப்பூர் ஊராட்சி கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் அந்தலி தலைமதகு பாலம் அமைக்கும் பணிக்காக நேற்று ெதாழிலாளர்கள் குழிதோண்டினர். அப்போது மூன்று கருங்கல் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. 3 அடி உயரம் உடைய ஒரு அம்மன் சிலை, ஒரு பிள்ளையார் சிலை, ஒருவராகி அம்மன் சிலைகள் என தெரியவந்தது.

தகவல் அறிந்த கருப்பூர் ஊராட்சி தலைவர் மதிவிழி செந்தமிழ்செல்வன், திருவையாறு தாசில்தார் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த தாசில்தார் பழனியப்பன், வருவாய் ஆய்வர் நவநீதகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாரதி மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிலைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து மூன்று சிலைகளையும் பத்திரமாக மீட்டு தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

இதுகுறித்து தாசில்தார் பழனியப்பன் கூறுகையில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம் தொல்பொருள் ஆய்வு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த காலத்து சிலை என்பது தொல்பொருள் ஆய்வு துறை ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என்றார்.

Related Stories: