திருச்சியில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை ... மகிழ்ச்சியில் மக்கள்!!

திருச்சி: திருச்சியில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையை துவங்குவதற்கான ஆய்வறிக்கை மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொங்குவதற்கான ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மெட்ரோ சேவை தொடர்பாக பேசிய மேயர் அன்பழகன், சமயபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர் வழியாக வயலூர் வரை 18.7 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம், அதுவாக்குடியிலிருந்து திருவெறும்பூர், பால்பண்ணை, மத்திய பேருந்து நிலையம் வழியாக பஞ்சப்பூர் வரை 26 கி.மீ தொலைவுக்கு இரண்டாவது வழித்தடம்,

 அடுத்ததாக ஜங்சனிலிருந்து பஞ்சப்பூர், ஏர்போர்ட், புதுக்கோட்டை சாலை வழியாக மாத்தூர் பகுதியிலுள்ள ரிங்ரோடு வரை 23.3 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம் என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் அமைக்க சாத்திய க்கூறுகள் ஆராயப்பட்டுள்ளது,என தெரிவித்தார். அத்துடன் மெட்ரோ ரெயிலுக்காக திருச்சியின் முக்கிய இடங்களில் மண் பரிசோதனை முடியும் நிலையில் இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்சி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 68 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட உள்ள வழித்தடங்களில், எங்கெங்கு நிறுத்தங்கள் அமையும், எந்த வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்பது குறித்து, அடுத்து நடைபெறக்கூடிய விரிவான திட்ட அறிக்கையின்போது தெரியவரும்.ஏற்கனவே திருச்சி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வரும் நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என அம்மாவட்ட மக்கள் கருதுகின்றனர். சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை, திருச்சியிலும் மெட்ரோ ரயில் சேவை வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: