×

ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

அருமனை:  குமரி மாவட்டம் பத்துக்காணியை சேர்ந்தவர் புரோன். இவர் தனது பட்டா நிலத்தில் இருந்த மரங்களை வெட்ட அனுமதிக்ககோரி, களியல் கிராம நிர்வாக அலுவலர் முத்துவிடம் மனு அளித்திருந்தார். இதை விசாரித்த கிராம நிர்வாக அலுவலர் முத்து, ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டார். பேரம் பேசியதில் ரூ.2 ஆயிரத்துக்கு சம்மதித்துள்ளார். இதுகுறித்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புரோன் புகார் அளித்தார்.  போலீசார் ஆலோசனையின் பேரில் நேற்று காலை 10 மணியளவில் அலுவலகத்தில் இருந்த விஏஓ முத்துவிடம், புரோன் ரசாயன பொடி தடவிய ரூ.2 ஆயிரத்தை கொடுத்தபோது மறைந்திருந்த  போலீசார்  முத்துவை  கைது செய்தனர். பின்னர் அலுவலகத்திலும், முத்து வாடகைக்கு உள்ள குழித்துறை வீட்டிலும் சோதனை நடந்தது.



Tags : Rs. 2,000 bribed VAO. Arrest
× RELATED 10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை: வாலிபர் கைது