×

கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் : ராகுலின் வயநாடு தொகுதிக்கும் இன்று தேர்தல் அறிவிப்பா?

பெங்களூரு : கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.:கர்நாடாகாவில் ஆளும் பாஜக அரசின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை 11.30 மணிக்கு கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 2.51 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

இதனிடையே தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னதாகவே தேர்தல் களம் அம்மாநிலத்தில் சூடு பிடித்துள்ளது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் மக்களிடம் ஆதரவை திரட்டி வருகின்றனர்.மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, மூத்த தலைவர் குமாரசாமி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 124 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதனிடையே காலி என அறிவிக்கப்பட்ட கேரளா வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது.


Tags : Karnataka Assembly ,Election ,Rahul ,Wayanad , Karnataka, Assembly, Election, Election Commission
× RELATED சாதாரண தேர்தல் இல்லை அரசியலமைப்பு,...