- ரயில்வே வாரியம்
- பூருந்தவள்ளி
- போரூர் மெட்ரோ ரயில் சேவை
- தில்லி
- பூரந்தவள்ளி
- சென்னை
- Poonthamalli
- கலங்கரை விளக்கம்
டெல்லி : பூவிருந்தவல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவைக்கு தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கியது ரயில்வே வாரியம். சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை 4-வது வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. சான்று தரப்பட்டதை அடுத்து பூவிருந்தவல்லி – போரூர் இடையே 10 கி.மீ. தூரத்துக்கு விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு சான்று கிடைக்காததால் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவில்லை.
சிக்னல் தொழில்நுட்பத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தற்போது ரயில் இயக்க பாதுகாப்பு சான்று வழங்கியது. இறுதிக்கட்ட சோதனை ஜன.20ம் தேதி நடைபெற இருப்பதாகவும் அப்போது நிரந்தர சான்றிதழ் கிடைக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரூர் – வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தில் நாளை காலை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. போரூர் முதல் வடபழனி வரை 7 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. போரூர் முதல் வடபழனி வரையிலான டவுன் லைன் வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
