காசநோய் விழிப்புணர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உலக காசநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர், காசநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்வில், காசநோய் குறித்த விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்பட்டது. இதில், அரசு மருத்துவமனையின் கல்லூரி முதல்வர் நாராயணசாமி, மருத்துவர்கள், செவிலியர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

செய்யூர்: இந்தளூர் கிராமத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு விழா நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை வகித்தார்.  இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவர்களிடையே காசநோய் குறித்து பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார். பின்னர், கலெக்டர் முன்னிலையில் மாணவ, மாணவிகள்   கிராம பொதுமக்கள் ஆகியோர் காசநோய் ஒழிப்புக்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விழாவில், சித்தாமூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் மலா சிவா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: