6 முதல் 8-ம் வகுப்பு வரையான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ன் முடிவுகள் வெளியீடு.!

சென்னை: 6 முதல் 8-ம் வகுப்பு வரையான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. https://www.trb.tn.gov.in/ என்கிற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை அறியலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாள் நடத்தப்பட்டு அதில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இரண்டாம் தாள் 2023 ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  பின்னர் தேதி தள்ளிவைக்கபட்டு கடந்த பிப்ரவரி 3 முதல் 15-ம் தேதி வரை கணினி வழியில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. 6 முதல் 8-ம் வகுப்பு வரையான ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-ன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.trb.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: