கும்பக்கரை அருவியில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ச்சி..!!

தேனி: கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதை அடுத்து அங்கு ஏராளமானோர் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 கிலோ மீட்டர் தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கொடைக்கானல் மற்றும் வட்டகானல் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து இருக்கும். நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கும்பக்கரை அருவிக்கு வந்தனர்.

இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் வட்டகானல் பகுதியில் திடீரென பெய்த கனமழை காரணமாக அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியின் வடக்கு பகுதியில் 30 பேரை மீட்டனர். இதை தொடர்ந்து அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீர்வரத்து சீரானதை அடுத்து இன்று காலை குளிக்க விதிக்கப்பட்ட தடை விளக்கப்பட்டது. இதனால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

Related Stories: