நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை: நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண தொகையான ரூ.5000 காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்ளுக்கும் மழைகால நிவாரண உதவி வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ணார பேட்டையில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மண்பாண்ட தொழிலாளர்கள் பேரணியாக சென்று நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தங்களது தொழில் மிகப்பெரிய பாதிப்பிற்குள்ளாகும் என்றும் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: