கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் குறிஞ்சி மலர் தோட்டம்

கொடைக்கானல் : கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் குறிஞ்சி மலர் தோட்டம் அமைக்கும் பணிகளை தோட்டக்கலைத் துறையினர் விரைவாக மேற்கொண்டு வருகின்றனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு மலர்கள் பூத்து குலுங்கி வருகிறது. இந்த நிலையில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூக்கள் மலைபபகுதியின் பெரும்பாலான இடங்களில் உரிய காலங்களில் பூத்து குலுங்குவது வழக்கம். இதன்படி கடந்த ஜனவரி மாதம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் லானட்டா என்ற புதிய வகை குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கியது. இதையடுத்து கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா நிர்வாகம் அதன் நாற்றுகளை சேகரித்து, ஒரு மாத காலம் பதியமிட்டு பராமரித்து வந்தது.

இதன் காரணமாக அந்த குறிஞ்சி செடிகள் வேர் பிடித்ததை தொடர்ந்து அச்செடிகளை கொண்டு புதிய குறிஞ்சி தோட்டத்தை பிரையண்ட் பூங்காவில் அமைத்து வருகின்றனர். இந்த குறிஞ்சி செடிகள் மூன்று வருடங்களில் பெரிதாக வளர்ந்து சுற்றுலா பயணிகளை கவர்வதுடன், தோட்டக்கலை பயிலும் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: