கொட்டக்குடி ஊராட்சியில் நிதி ஒதுக்கி 8 ஆண்டாகியும் முடங்கிக் கிடக்கும் காரிப்பட்டி மலைச்சாலை-விவசாயிகள் வேதனை

போடி : போடி அருகே கொட்டக்குடி ஊராட்சியில் சுமார் 6 கிமீ மலைச்சாலை அமைக்க நிதி ஒதுக்கி 8 ஆண்டுகளாகியும் பணிகள் நடக்காமல் வனத்துறை முட்டுக்கட்டையால் முடங்கிக் கிடக்கும் சாலைப்பணியை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.போடி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கொட்டக்குடி ஊராட்சி உள்ளது.

இந்த ஊராட்சியில் குரங்கணி, முட்டம், மேல் முட்டம், மு துவாக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன், கொழுக்கு மலை, டாப்ஸ்டேஷன் ஆகிய கிராமங்கள் உள்ளன. போடியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் 17 வது கிலோ மீட் டரில் குரங்கணி மலைச்சாலையில் கொம்பு தூக்கி அய்யனார் கோயில் விலக்கிலிருந்து 6 வது கிலோ மீட்டரில் காரிப்பட்டி உள்ளது. கொட்டக்குடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள், விவசாயிகள் தொழிலாளர்கள் என சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர்கள் வசிக்கின்றனர். இதில் காரிப்பட்டி மலைக்கிராத்தில் காபி, ஏலம், மிளகு, ஆரஞ்சு என பல ஆயிரகணக்கான ஏக்கரில் விவசாயம் நடக்கிறது.

இப்பகுதி விவசாய நிலங்களுக்கு தினந்தோறும் போடியில் இருந்து தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு குதிரை, கழுதைகள் மற்றும் ஜீப்புகளில் விவசாயப் பணிக்கு சென்று வருகின்றனர். இதில்காரிப்பட்டி செல்வதற்கான சாலையானது, கரடு முரடான சாலையில் மிகுந்த சிரமத்துடன் கரணம் தப்பினால் மரணம் என்ற அபாயத்தில் பயணித்து வருகின்றனர்.

பருவமழை காலங்களில் இச்சாலையானது, போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக சேறும், சகதியுமான சாலையாக மாறி விடும் சூழலில் விவசாய பணி செய்யமுடியாத அளவிற்கு விவசாயப்பணிகள் முடங்கி விடும் அபாயகரம் நீடி த்து வருகிறது. இருந்தபோதிலும், வேறு வழியில்லாமல் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருள்களை தலைச்சுமையாக குரங்கணிக்கு வரும் அவலம் தொடர்கதையாக உள்ளது.

இத்தகைய காரிப்பட்டியில் உள்ள 6 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையினை தடுப்பு சுவர்கள் எழுப்பி விவ சாயிகள் வாகனங்கள் செல்ல வசதியான தார்சா லையாக மாற்றி மேம்படுத்த வேண்டும் என சம்மந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, கடந்த 2016 -17 ஆம் ஆண்டு பாரத பிரதமர் கிராம சாலை திட்டத்தின் கீழ் 19.66 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக காரிப்பட்டியில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது. சாலைஅமைய உள்ள இடம் வனப்பகுதியில் வருவதால் வனத்துறையின் முட்டுக்கட்டையால் இப்பணி ஆரம்ப நிலையிலேயே முடங்கிபோயுள்ளது.

வனத்துறையினரின் முட்டுகட்டையை நீக்க கடந்த காலத்தில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். நடவடிக்கை எடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தவிர இதில் எவ்வித நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை என விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. இதனால், இன்று வரை இச்சாலைப்பணி நடக்காமல் உள்ளது.

இதுகுறித்து காபி, ஏலம் விவசாயிகள் கார்த்திகேயன், பாண்டி, வேலம்மாள், குருசாமி ஆகியோர்கள் கூறுகையில்: கடந்த அதிமுக தலைமையிலான ஆட்சிக்காலத்தின்போது, அப்போது துணை முதல்வராக இருந்த போடித்தொகுதி எம்.எல்.ஏவான ஓ.பன்னீர்செல்வத்திடம் முறையிட்டும், அவர் வனத்துறையிடம் அனுமதி பெற்று தராததால் இதுவரை சாலை வசதி கிடைக்க வில்லை. இதற்கென ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது என தெரிய வில்லை என்றனர்.காரிப்பட்டி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான காரிப்பட்டி சாலையை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் வனத்துறையுடன் பேசி தீர்வு காணவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: