ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து ஊட்டியில் காங்கிரசார் உண்ணாவிரத போராட்டம்

ஊட்டி : ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து ஊட்டியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊட்டியில் உள்ள ஏடிசி., பகுதியில் நேற்று காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஊட்டி நகர காங்கிரஸ் தலைவர் நித்யசத்யா தலைமை வகித்தார். பாரத்ஜோடா யாத்ரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், எஸ்டி., பிரிவு மாநில தலைவர் ப்ரியாநாஷ்மிகர், மாவட்ட துணைத் தலைவர் கெம்பைய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தின் போது, மத்திய அரசை கண்டித்தும், பிரமர் மோடியை கண்டித்தும் பலரும் சிறப்புரையாற்றினர்.

இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் விவேக் லஜபதி, பிசிசி., உறுப்பினர்கள், ரகுசுப்பன், காந்தல் நாகராஜ், கமலசீராளன், ஊட்டி சட்டமன்ற பாரத்ஜோடோ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்,  மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஊட்டி ரவிக்குமார், ரபீக், நேரு, பார்த்திபன், வழக்கறிஞர் ரவிக்குமார், குன்னூர் தகரத்தலைவர் ஆனந்த், முன்னாள் பிசிசி., உறுப்பினர் பார்வதி அம்மாள்,வட்டாரத்தலைவர்கள் கீழ்குந்தா ஆனந்த், பாலகொலா ராமன்சுப்ரமணி, கோத்தகிரி வட்டாரத் தலைவர் சில்லாபாபு அதிகரட்டி பாலன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்வரி பாபு, மாநில ஓபிசி., பிரிவு பொதுச்செயலாளர் லாரன்ஸ், மாநில வர்த்தக பிரிவு தலைவர் செல்வராஜ், செயலாளர் சதீஷ்குமார், மாநில மகிளிர் காங்கிரஸ் தலைவர் சித்ரா, ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரஜினிகாந்த், ஜெயலட்சுமி சுதாகர், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பட்பயர் பத்மநாபன், மாவட்ட சமூக ஊடகப்பிரிவு தலைவர் மானேஷ்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: