×

லக்ஸம்பர்க் அணிக்கு எதிராக ரொனால்டோ அசத்தல்

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றில் லக்ஸம்பர்க் அணிக்கு எதிராக நடந்த போட்டியில், போர்ச்சுகல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 9வது மற்றும் 31வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். பெலிக்ஸ் (15வது நிமிடம்), பெர்னார்டோ சில்வா (18’), ஒடாவியோ (77’), ரபேல் லியோ (88’) ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர். தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த போர்ச்சுகல் அணி ஜே பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 37 யூரோ தகுதிச்சுற்று ஆட்டங்களில் விளையாடி உள்ள ரொனால்டோ அவற்றில் 35 கோல் அடித்து போர்ச்சுகல் அணிக்காக அதிக கோல் அடித்த வீரராக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.


Tags : Ronaldo ,Luxembourg , Ronaldo was fantastic against Luxembourg
× RELATED 38 வயதிலும் கலக்கி வரும் கிறிஸ்டியானோ...