நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம் புதிய மின் கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் நடந்த, நுகர்வோர் பாதுகாப்பு சங்க பொதுக்குழு கூட்டத்தில், பழைய மின் கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், நுகர்வோர் பாதுகாப்பு சங்க கோரிக்கையினை ஏற்று, 10 ஆண்டுகளாக மூடிக்கிடந்த ரேஷன் கடையினை திறந்தமைக்கு மாவட்ட நிவாகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், கேத்தாரீஸ்வரர் கோயில் தெருவில் கால்வாய் அமைக்க வலியுறுத்துதல், சுண்ணாம்புகார தெருவில் சாய்ந்த நிலையில் உள்ள பழுதான மின் கம்பத்தினை அகற்றி, புதிய மின் கம்பம் அமைக்க ஏற்பாடு செய்தல், உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் வந்து செல்லும், பஸ் குறித்த அறிவிப்புகளை ஒலிபெருக்கி மூலம், பொதுமக்களுக்கு அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: