திருப்போரூர் அருகே ஊட்டச்சத்து விழிப்புணர்வு

திருப்போரூர்: திருப்போரூர் அருகே ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றியம் ஆமூர் ஊராட்சியில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், ஊட்டச்சத்தை உறுதிப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆமூர் ஊராட்சி மன்ற தலைவர் வரதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜானகி, மேற்பார்வையாளர் செண்பகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றினர். இதைதொடர்ந்து, கலைக்குழு சார்பில் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முடிவில், களப்பணியாளர் நவநீதம் நன்றி கூறினார்.

Related Stories: