திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ரேக்ளா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு: அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளியூர், ஆர்.ஆர்.கண்டிகையில் ரேக்ளா குதிரைப் பந்தய போட்டி நடத்தப்பட்டது. இதற்கு ஒன்றிய செயலாளர் டி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை சேர்மனும் ஒன்றிய அவைத் தலைவருமான எம்.பர்கத்துல்லாகான், ஊராட்சி துணைத் தலைவர் டி.முரளிகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் டி.எம்.எஸ்.வேலு ஆகியோர் வரவேற்று பேசினர். ரேக்ளா போட்டியை பால்வளத் துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் துவக்கிவைத்தனர்.

சிறிய குதிரை போட்டியில் - முதல் பரிசு - வெள்ளானூர் குணராஜ், இரண்டாம் பரிசு - திருவள்ளூர் முருகேசன், மூன்றாம் பரிசு - திருவள்ளூர் எல்.டி.ரவி, நான்காம் பரிசு - ஆடியோ விஜி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நடுக் குதிரை போட்டியில் முதல் பரிசு -  திருவள்ளூர் பி.நந்தகுமார், இரண்டாம் பரிசு - ஆவடி விக்கி, மூன்றாம் பரிசு - சென்னை ராதா, நான்காம் பரிசு - திருவள்ளூர் எல்.டி.ரவி, பெரிய குதிரை போட்டியில் - முதல் பரிசு - சென்னை எம்.சரவணபவ, இரண்டாம் பரிசு -  பல்லாவரம் ராஜ், மூன்றாம் பரிசு -  சென்னை இக்பால், நான்காம் பரிசு -  ஒதிக்காடு கமல முதலியார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

விழாவில், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஜெயபாலன், ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர் ஜி.விமல்வர்ஷன், ஒன்றிய செயலாளர் தங்கம் முரளி, மாவட்ட கவுன்சிலர் டி.தென்னவன், ரேக்ளா குதிரைகள் நலச் சங்க தலைவர் ஜி.ஆர்.ரவீந்திரபாபு, ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.மனோகரன், பி.மதுரைவீரன், டி.பிராங்கிளின், ஈக்காடு கா.முகம்மது ரபீக், எஸ்.சங்கீதா சீனிவாசன், கிளை நிர்வாகிகள் பி.கஜேந்திரன், எம்.சுரேஷ், பி.ஏழுமலை, எஸ்.வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: