நெல்லை - நாகர்கோவில் சாலையில் ஹைட்ரஜன் வாயு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

நெல்லை: நெல்லை - நாகர்கோவில் சாலையில் ஹைட்ரஜன் வாயு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்படுவதை தடுக்க சிலிண்டர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக நெல்லை - நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துகுடியில் இருந்து நெல்லை மாவட்டம் கூடங்குளம்த்திற்கு ஹைட்ரஜன் சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி நெல்லை - நாகர்கோவில் சாலையில் வள்ளியூர் அருகே அணுகு சாலை முகப்பில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துகான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஹைட்ரஜன் சிலிண்டர்கள் வெளியே விழுந்துள்ளதால் அருகில் ஏதும் விபத்து ஏற்பட்டுவிடக்கூடாது. எரிவாயு சிலிண்டர் வெடித்து விட கூடாது என்பதற்காக, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்துள்ளனர். சிலிண்டர்களை குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: