பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் முனீஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகை கிராமத்தில் பழமை வாய்ந்த சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், எல்லையம்மன், கலிவரதராஜ பெருமாள், தான்தோன்றீஸ்வரர், அங்காளம்மன், வீரபத்திரர், முனீஸ்வரன் உள்ளிட்ட திருத்தலங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி முன்னதாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதன்பின்னர் யாகசாலையில் இருந்து வேத விற்பன்னர்களால் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்து முனீஸ்வரன் சிலைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அப்போது அங்கு குடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதன்பின்னர் முனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டது. மூத்த அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

Related Stories: