மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை ரூ.1.35 கோடி டெண்டர் ஒதுக்கீடு: தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பு

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு செயல் திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.35 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீடு ெசய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை தொடர்ந்து, மதுரை மாநகரிலும் ரூ.8 ஆயிரத்து 500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரையிலான போக்குவரத்து திட்டமாகும். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், விரிவான செயல் திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை கேட்டது. அதன் படி விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான நிறுவனம் இறுதி செய்யும் பணி வேகமடைந்தது. இதற்காக ஆர்.வி அசோசியேட்ஸ், பாலாஜி ரயில் ரோடு, ரிட்ஸ், சிஸ்ட்ரா என 4 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் ஆர்.வி அசோசியேட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1.35 கோடிக்கான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்ட அறிக்கையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் இடம் உள்ளிட்டவை இடம்பெறும் என தெரிகிறது.

Related Stories: