இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

அவனியாபுரம்: இலங்கை  அரசு கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உரிய நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது என மதுரையில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்  தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி: சவுராஷ்ட்ரா  தமிழ்ச்சங்கம் சார்பில் மதுரைக்கும் சோம்நாத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு வாரம் தமிழ் விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் தொகுதியான காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே  உள்ள உறவுகள் குறித்தும், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் காஞ்சிபுரம் பட்டுச்சேலை, பனாரஸ் பட்டுச்சேலைக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் விவாதிக்கப்பட  உள்ளது.

தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சர்  ஜெய்சங்கர் இலங்கை அரசுடன் பேசி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழக  மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. இலங்கை அரசு கையகப்படுத்திய படகுகளை மீட்க உரிய நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டு, குழு  காப்பீட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் எம்பி பதவி  நீக்கம் கோர்ட் நடவடிக்கை. அதில் யாரும் தலையிட  முடியாது என்றார்.

Related Stories: