பறக்க தயாரானபோது மணலில் இன்ஜின் சிக்கியது பாரா மோட்டார் கவிழ்ந்ததில் உயிர் தப்பிய ஆந்திர அமைச்சர்

திருமலை: பறக்க தயாரானபோது மணலில் இன்ஜின் சிக்கி பாரா மோட்டார் கவிழ்ந்த விபத்தில், ஆந்திர அமைச்சர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திர மாநில நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ் விசாகப்பட்டினம் வந்தார். ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக விசாகப்பட்டினத்தில் மாரத்தான் மற்றும் சாகச விளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று காலையில் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சுரேஷ் ஏற்பாட்டாளர்களின் அழைப்பின் பேரில் பாரா மோட்டார் சவாரியை தொடங்கி வைத்தார்.  இதற்காக விசாகப்பட்டினம் ஆர்.கே கடற்கரையில் பாரா மோட்டாரிங் பைலட்டுடன் இணைந்து அமர்ந்து வானில் பறக்க அமைச்சர் தயாரானார். அப்போது  மணல் மேட்டில் இன்ஜின் சிக்கி கவிழ்ந்தது.  இதனால் பெரிய ஆபத்தில் இருந்து அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ் மயிரிழையில் தப்பினார். இதனையடுத்து அமைச்சர் பாரா மோட்டாரிங் மூலம்  வானில் செல்லாமல் கீழே இறங்கி சென்றார்.  வானில் பறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்  இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: