ராகுலுக்கு பின்னால் நாடே நிற்கிறது பாஜ ஆட்சி வந்ததில் இருந்தே ஜனநாயகம் செத்து விட்டது: முத்தரசன் கடும் கண்டனம்

நாகர்கோவில்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: 2014ம் ஆண்டு பாஜ ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஜனநாயகம் செத்துவிட்டது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட உரிமை உண்டு. அந்த உரிமையை பாஜ அரசு பறித்து இருக்கிறது. சர்வாதிகாரியாக, பாசிச கொள்கையை பிடித்துக் கொண்டு பிரதமர் மோடி செயல்படுகிறார். ராகுல் காந்திக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை ஒரு தனிப்பட்ட நபருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையாக பார்க்க கூடாது.

ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்தாக பார்க்க வேண்டும். தற்போது ராகுல் காந்திக்கு பின்னால் இந்த நாடே நிற்கிறது. தண்டனை வழங்கிய நீதிமன்றமே அதை 30 நாள் நிறுத்தி வைத்துள்ள நிலையில் மிக அவசரமாக ஒன்றிய அரசு ராகுலை தகுதி நீக்கம் செய்திருக்கிறது. ஜனநாயகத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை தோற்கடித்து மாற்று ஆட்சி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: