ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்த சென்னையில் 7 இடங்களில் காங்கிரசார் போராட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட பலர் பங்கேற்பு

சென்னை: ராகுல்காந்தியை எம்பி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை  கண்டித்து, சென்னையில் நேற்று 7 இடங்களில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதில் எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.  காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி எம்பியை  பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. சென்னையில், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில்  திருவொற்றியூர் காலடிப்பேட்டை காந்தி சிலை அருகில் போராட்டம் நடந்தது.  இதில், மாநில செயலாளர் ஆர்.டி.குணாநிதி, முன்னாள் மாவட்ட தலைவர் டி.வி.துரைராஜ், கவுன்சிலர்கள் ஆர்.சுரேஷ்குமார், மணலி தீர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மத்திய சென்னை  மேற்கு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில் அமைந்தகரை அண்ணா வளைவு  முன்பு சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதில் டாக்டர் செல்லக்குமார் எம்பி,  பொது செயலாளர் பி.வி.தமிழ்செல்வன், முன்னாள் மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம்,  மாநில செயலாளர் ரஞ்சித்குமார், கலைப்பிரிவு மாநில செயலாளர் சூளை  ராஜேந்திரன், கலைபிரிவு மாவட்ட தலைவர் சந்திரசேகர், அலெக்ஸ், மாணிக்க வாசகம், நரேந்திர தேவ்,  தண்டபாணி, டாக்டர் உமாபாலன், நரசிம்மன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர்   சிவராஜசேகரன் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த போராட்டத்தில்   திருநாவுக்கரசர் எம்பி, கார்த்தி ப.சிதம்பரம் எம்பி, ஆர்.கணேஷ் எம்எல்ஏ,  முன்னாள் எம்பி விஸ்வநாதன், பொது செயலாளர் சிரஞ்சீவி, மகிளா காங்கிரஸ்  தலைவர் வழக்கறிஞர் சுதா, முன்னாள் மாவட்ட தலைவர் அரும்பாக்கம்  வீரபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தென்சென்னை மேற்கு மாவட்டம்  சார்பில் பொது செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில்   போரூர் மின்வாரிய அலுவலகம்  அருகில்  சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதில் அசன் மவுலானா எம்எல்ஏ, துணை  தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாநில செயலாளர் கமலிகா காமராஜ்,  இலக்கிய  பிரிவு மாநில துணை தலைவர் பூங்கொடி, சென்னை மநகராட்சி கவுன்சிலர் பானு  பிரியா உள்பட ஏராளமான காங்கிரசார் கலந்து  கொண்டனர். தென்சென்னை  மத்திய மாவட்டம் தலைவர்  எம்.ஏ.முத்தழகன் தலைமையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு  நடந்த போராட்டத்தில்  விஜய்வசந்த் எம்பி, ஆ.கோபண்ணா, மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் கே.விஜயன், தலைமை நிலைய செயலாளர்  திருவான்மியூர் மனோகரன், இல.பாஸ்கரன், விருகை பட்டாபி, முகமது யூசுப் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வடசென்னை  மேற்கு  மாவட்ட தலைவர் டெல்லி பாபு தலைமையில் பெரம்பூரில் நடந்த  போராட்டத்தில் எம்எல்ஏக்கள் அசன்மவுலானா, துரைசந்திரசேகர், பொன்கிருஷ்ணமூர்த்தி, இமையா கக்கன், மாநில செயலாளர் அகரம் கோபி, பெரம்பூர் நிசார் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.  தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி காந்தி சிலை முன்பு நடந்த போராட்டத்தில் துணை தலைவர்கள் ஆர்.தாமோதரன், கீழானூர்  ராஜேந்திரன், ஆர்.டி.ஐ.பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, மகளிர் அணி துணை தலைவர் மலர்கொடி உள்பட  ஏராமானோர் கலந்து கொண்டனர். சென்னையில் 7 இடங்களில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய சத்தியாகிரக போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது.

Related Stories: